இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்
இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ.
இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மன்னர்கள் குறித்த வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ஆய்வு மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ள நூலாக இது அமைந்துள்ளது.
—-
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள், டாக்டர் ம. லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 185ரூ.
மனித மூளை ஒரு அற்புத இயந்திரம். அதனை முறைப்படி வேலை வாங்க வேண்டியது நம்முடைய கடமையாகும். இந்த அரிய பொறுப்பை திறமையுடன் செய்வதற்கு அனைவருக்கும் வழிகாட்டும்வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 296 பக்கங்களில் 50 தலைப்புகளில் அரிய புகைப்படங்களுடன் மூளைக்கான எளிதான பயிற்சிகள் விளையாட்டு வடிவில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தை படிப்பதன் மூலம் நம்மிடம் ஒளிந்துகிடக்கும் திறமையையும் வெளிக்கொணர முடியும். எதையும் முயற்சியால் சாதிக்க முடியும். அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எளிதாகவும் இருக்கலாம். மூளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 22/1/2014.