நெஞ்சின் அலைகள்
நெஞ்சின் அலைகள், கவிமாமணி புதுவயல் செல்லப்பன், நல்லழகம்மை, 46, 2வது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 200, விலை 125ரூ.
புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை, தேசப்பற்று, தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். சமுதாயத்தின் குறைகளை கண்டு வேதனைப்பட்டாலும், இனி தீர்வு வரும் என்று கருதும் ஆசிரியரின் உணர்வு பாராட்டுதற்கு உரியது. அதற்கு அடையாளமாக, உழைப்பினால் கிடைக்கும் சோற்றை, உண்மையில் எய்தும் இன்பம் அழைத்ததெவர் கோடி கோடி அளிப்பினும் கிடைப்பதுண்டா? என்ற கவிதையாகும் மரபுக்கவிதை மட்டும் இன்றி புதுக்கவிதையும் இதில் காணப்பட்டாலும் காயம் பட்ட சமுதாயத்திற்கு நியாயம் உரைக்கும் கவிதைகளாக உள்ளன. அது இந்த நூலின் சிறப்பம்சமாகும். நன்றி: தினமலர், 16/2/2014.
—-
மவுனமும் மணிமுடியும், வைகறை, பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 200ரூ.
கருத்துரிமை, மத உரிமை, சுதந்திரம் போன்ற கருத்துகளை வலியுறுத்தி பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் வைகறை. கட்டுரை ஒவ்வொன்றிலும் தனது கருத்துகளை உறுதியோடு வலியுறுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைக்கு இட்டுச் செல்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.