நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ. திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் […]

Read more

நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், கவிமாமணி புதுவயல் செல்லப்பன், நல்லழகம்மை, 46, 2வது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 200, விலை 125ரூ. புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை, தேசப்பற்று, தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். சமுதாயத்தின் குறைகளை கண்டு வேதனைப்பட்டாலும், இனி தீர்வு வரும் என்று கருதும் ஆசிரியரின் உணர்வு பாராட்டுதற்கு உரியது. அதற்கு அடையாளமாக, உழைப்பினால் கிடைக்கும் சோற்றை, உண்மையில் […]

Read more