திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு
திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு, கோட்டா நீலிமா, மணிஜல் பப்ளிசிங் ஹவுஸ் (பி) லிட், 7/32, தரைத்தளம், அன்சாரி ரோடு, தர்யாகனிஜ், புதுடில்லி 110002, பக். 275, விலை 199ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-183-9.html
கலியுக தெய்வமாகத் திகழும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் குறித்த விவரங்கள் அனைத்தும், இந்நூலில் உள்ளன. அனைத்துப் பாவங்களையும் போக்குபவன் என்று நினைத்தே, மக்கள் வேங்கடாசலபதியை வணங்குகின்றனர். இதற்கு ஆதரவாக இந்நூல் பல செய்திகளையும் கூறுகிறது எனலாம். திருப்பதியின் தோற்றம், சுவாமி வேங்கடாசலபதியின் தத்துவம், பக்தனின் வழிமுறைகள், திருப்பதி ஏழுமலையான் கொண்டாட்டங்கள் என்று நான்கு பெரும் பிரிவுகளில் இந்நூல் திகழ்கிறது. பக்தர்கள் படிக்க வேண்டிய அருமையான நூல். -டாக்டர் கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 16/3/2014.
—-
உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0000-236-6.html
வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டும் உண்மைக் கதைகளின் தொகுப்பு நூல். மனிதர்களை செயல்படத் தூண்டுபவர் என முத்திரை பதித்த மார்க் விக்டர் ஹான்ஸனும், ஜாக்கேன் பீல்டும் ஆங்கிலத்தில் படைத்ததை தமிழுக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார் வேங்கடகிருஷ்ணன். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.