நீ தெய்வீகமானவன்
நீ தெய்வீகமானவன், சுவாமி விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பதிப்பகம், பக். 448, விலை 200ரூ.
விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டில் வெளியான சிறப்பான தொகுப்பு நூல். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், சோர்ந்த தனிதனை எழுப்பி, சாதனை செய்ய வைக்கும் தீப்பிழம்பை எழுப்பும் சக்தி கொண்டவை. ராம கிருஷ்ணமடம் வெளியிட்ட எழுந்திரு விழித்திரு என்னும் 11 பாகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பரவசம் தரும் புதுநூல். இயற்கை, இறைவன், ஆன்மா பற்றிய விளக்கமும், படைப்பு என்ற தலைப்பில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிராண சக்தி பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. முதலில் ஆகாசம் தோன்றியது. அதன் பிறகே மற்றவை தோன்றின. உலக இயக்கம், அதிர்வு, எண்ணம் எல்லாம் உருவாயின என்று பிராணன் விளக்கப்பட்டுள்ளது. ஞானப் புதையலாகிய வேதங்களும், விளக்கம் தரும் உபநிடதங்களும், துணிவும், வலியும் தரும் பகவத் கீதையும் புதிய கோணத்தில் காட்டப்பட்டுள்ளன. 33 தலைப்புகளும் வாழ்க்கைப் பாடமாகத் தரப்பட்டுள்ளன. வாசித்தவர்கள் புதிய வலிமை பெறுவர். ஆன்மிக சக்தியால் இந்தியாவையும் ஆத்ம சக்தியால் இந்தியனையும் விழித்து எழச் செய்யும் வியத்தகு நூல் இது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 16/3/2014.
—-
நீங்களும் முதலாளி ஆகலாம், ஸ்ரீமாருதி பதிப்பகம், 200-173, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-8.html
சிறுதொழில் மூலம் பெரும் செல்வம் சேர்ப்பது எப்படி? கிடைத்த செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும், ஒருபொறுப்புள்ள குடிமகனாகவும் திகழ்வது எப்படி? போன்ற வினாக்களுக்கும் விடையளிக்கும் நூல். தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் எண்ணம் இருப்போருக்கு இப்புத்தகம் வழிகாட்டியாய் உதவும். சிறு தொழில்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாக இந்நூலை படைத்திருக்கிறார் நூலாசிரியர் கீதா பிரேம்குமார். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.