இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more

நீ தெய்வீகமானவன்

நீ தெய்வீகமானவன், சுவாமி விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பதிப்பகம், பக். 448, விலை 200ரூ. விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டில் வெளியான சிறப்பான தொகுப்பு நூல். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், சோர்ந்த தனிதனை எழுப்பி, சாதனை செய்ய வைக்கும் தீப்பிழம்பை எழுப்பும் சக்தி கொண்டவை. ராம கிருஷ்ணமடம் வெளியிட்ட எழுந்திரு விழித்திரு என்னும் 11 பாகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பரவசம் தரும் புதுநூல். இயற்கை, இறைவன், ஆன்மா பற்றிய விளக்கமும், படைப்பு என்ற தலைப்பில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிராண சக்தி பிரபஞ்சம் முழுவதும் […]

Read more