மணிமேகலை காட்டும் மனித வாழ்வு
மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 192, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை-பதவுரை-உரைச்சுருக்கம்-பொழிப்புரை என்று பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், சாமி சிதம்பரனாரால் இந்நூல் சற்றே வித்தியாசமானதாக எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலையின் மாண்பு என்ற தலைப்பில் துவங்கி, சிந்திக்க வேண்டியவை என 23 தலைப்போடு நூல் நிறைவடைகிறது. பசிக்கொடுமை (பக்.54), பிற மத வெறுப்பு (பக். 87), ஊழ்வினையும் பிறப்பும் (பக். 93) இலக்கியச் சுவை (பக். 152), என வாழ்வியல் நெறிகளை மணிமேகலை காப்பியத்துடன் ஒப்பிட்டு, ஒரு திறனாய்வு நூல் போன்று சாமி, சிதம்பரனாலர் தந்துள்ளார். நன்றி: தினமலர், 23/3/2014.
—-
கட்டுரைக் களஞ்சியம், சிலம்புச் செல்வர், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 216, விலை 100ரூ.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சுயசிந்தனையும், தனக்கெனச் சில கொள்கைகளையும் உடையவர். இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், ஏராளமான கட்டுரைகளைத் தமிழ், முரசு, தமிழன் குரல், செங்கோல் போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். அவ்விதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் சில, நூல் வடிவம் பெற்றுள்ளன. எல்லாக் கட்டுரைகளுமே, வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக வ.உ. சிதம்பரனார், கப்பலோட்டிய தமிழன் என்று அடைமொழியிட்டு, அவரது பன்முகச் சிறப்புகளைத் தொட்டுக்காட்டி எழுதியிருக்கும், சில கட்டுரைகள் மிகவும் அற்புதமானவை. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 23/3/2014.