உடையும் இந்தியா
உடையும் இந்தியா, ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும், ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 768, விலை 425ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சர்வதேச அளவில் பல்வேறு சதிகள் நடந்தாலும், அதில் மூன்று சதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று இஸ்லாமிய தீவிரவாதம், இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதம், மூன்று மனிதஉரிமைப் போராட்டம் என்ற போர்வையில் தலித் இன மக்களைத் தனியாக பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இதில் முதல் இரண்டு விஷயங்களைச் சுருக்கமாகக் கூறி, மூன்றாவதாகக் கூறப்படும் தலித் இன பிரிவினைவாத அச்சுறுத்தலை மட்டும் இந்நூலாசிரியர்கள் இந்நூலில் பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். குறிப்பாக, மனித உரிமைகள், மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி மற்றும் தலைமைப் பண்பு பயிற்சிகள் ஆகியவற்றின் போர்வையில் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவிகள், உண்மையில் எந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை இந்நூலில் விவரிக்கின்றது. தவிர, ஆரிய திராவிட இனங்கள் என்ற புரட்டு எப்போது, யாரால் எப்படி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சர்ச்களின் பங்கு, தமிழ் ஈழம் என்ற போர்வையில் தமிழ்ப் பிரிவினைவாத இயக்கங்களுக்கு மேற்கத்திய ஆராய்ச்சியுலகம் தரும் ஆதரவு. இந்தியாவின் அனைத்து ஜாதிப் பிரச்னைகளுக்கும் திராவிட கிறிஸ்தவம்தான் தீர்வு என்று பரப்பப்படும் பிரசாரம் என்று இந்தியாவின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் பல விஷயங்கள் இந்நூலில் புள்ளி விவரங்களுடன் கூறப்பட்டுள்ளது. மிக முக்கிய நூல்களில் இதுவும் ஒன்று. – பரக்கத். நன்றி: துக்ளக், 12/3/2014.
—-
பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 160ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-522-6.html உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை கலைந்து, உலகில் சமத்துவத்தை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலைப் பெற்றுத் தரவும் கிடைத்த ஆயுதம்தான் கம்யூனிஸம். ஆனால், அறிவார்ந்த இந்த கம்யூனிஸ சித்தாந்தம், நடைமுறையின்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது, அது உலகுக்குக் கொடுத்த பஞ்சம், படுகொலை, பேரழிவுகள் என்ன என்பதை இந்நூலாசிரியர் புள்ளி விவரங்களுடன் இந்நூலில் விவரிக்கிறார். கம்யூனிஸத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்பது தொடங்கி, அதற்கான காரணங்கள் என்ன, அதன் சமய மற்றும் பொருளாதார கொள்கைகள் என்ன, லெனின் ஸ்டாலின் மாவோ என்று எல்லா கம்யூனிஸத் தலைவர்களுமே எப்படி சர்வாதிகாரிகளாக மாறி மக்களை கொடுமைப்படுத்தினார்கள். தனது சாக்களையேகூட எப்படி வேட்டையாடினார்கள். குறிப்பாக ஸ்டாலினின் சகாக்களான டிராட்ஸ்கியும், புக்காரினும் என்ன ஆனார்கள், லெனினை ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டார். திபெத்தில் எப்படி இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. சேகுவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல்மாடல்தானா, இந்தியாவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, நேருவின் சோஷலிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன, தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரிக்கு நிகழ்ந்தது என்ன என்று கம்யூனிஸத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய பல கேள்விகளுக்கு இந்நூல் ஆதாரபூர்வமாக வரலாற்று ரீதியாகவும் விடையளிக்கிறது. நன்றி: துக்ளக், 19/3/2014.