இந்தியப் புதையல் ஒரு தேடல்
இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ.
புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை ஏமாற்றும் தெருவோர மந்திரவாதிகள் என்பன போன்ற பல உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறார். இன்றைய வாசகர்களுக்கு அன்றைய இந்தியாவையும் ஆன்மிகத்தையும் கண்முன் நிறுத்தும் ஒரு பெரும் முயற்சி இது. நன்றி: குமுதம், 2/4/2014.
—-
இம்ப்யுனிட்டி இன் ஸ்ரீ லங்கா, கே. எஸ். ராதா கிருஷ்ணன்.
இலங்கைப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பதிவு செய்கிறது இந்நூல். இலங்கைப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஐ.நா.விற்கு விளக்குவதற்காக எழுதப்பட்டு, இலங்கை மீது சர்வதேச விசாரணையும் கோரப்படுகிறது. நன்றி: இந்தியா டுடே, 2/4/2014.
—-
நலம் தரும் நறுமணமூட்டிகள், கு. சிவராமன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 50ரூ.
தினமும் நாம் உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களும், மசாலா பொருட்களும் என்ன மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை விளக்குகிறது இந்நூல். மஞ்சள், மிளகு, சீரகம், வெந்தயம், சீரகம், பூண்டு என நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மணமூட்டிகளின் மகத்துவத்தை விளக்கமாக அறியலாம். நன்றி: இந்தியா டுடே, 2/4/2014.