தமிழர் வரலாறு
தமிழர் வரலாறு (முதல் பகுதி), பி.டி. சீனிவாச அய்யங்கார், தமிழாக்கமும்-திறனாய்வும் புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 416, விலை 250ரூ.
கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்கும் நூல் இது. மூல நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையில் துணைப் பேராசிரியராக (1928-29) பணியாற்றியபோது, மேற்கொண்ட ஆய்வுப் பணியின் விளைவே இந்த நூல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததுடன், திறனாய்வும் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். ஏனெனில், சங்க இலக்கியங்களின் சிறப்பு, தமிழ், தமிழர்களின் பழம் பெருமைகள், மூவேந்தர் ஆட்சிக் காலத்து முதுமை ஆகியவை பற்றி, மூல ஆசிரியர் குறிப்பிட்ட பல கருத்துகளை தவறான முடிவுகள் என்று பட்டியலிட்டு அவற்றில் சிலவற்றின் ஏற்ற சான்றுகளை காட்டி மதித்து, அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாகவும் சேர்த்துள்ளார். தமிழறிஞர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். -சிவா. நன்றி: தினமலர், 6/4/2014.
—-
ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி, சையத் இப்ராஹிம் எம்.ஏ.எல்.டி. யுனிவர்ஷல் பப்ளிகேஷன்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17.
இதில் முஸ்லிம்கள் தென்மேற்கு ஐரோப்பாவில் செய்த எட்டு நூற்றாண்டு ஆட்சி பற்றிய வரலாறு அடங்கி உள்ளது. கணிதம், மருத்துவம், தத்துவம், வானநூல், இலக்கியம், இசை, அறிவியல் போன்ற பல துறைகளில், ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் ஐரோப்பாவின் ஆசிரியர்களாக அமைந்திருந்தனர் என்பதையும் விளக்குகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 6/4/2014.