ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கை ஸ்ரீமத் உத்தராதி மடாதீஸர், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 150ரூ.

பவிஷ்யோத்தர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷசலம், வேங்கடாசலம் என்ற நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் இன்னும் பதினான்கு பெயர்களைச் சொல்கிறது. இஷ்ட்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயர். ஞானத்தைக் கொடுப்பதால் அது ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சன்னிதானத்தைக் கொண்டிருப்பதால் அது தீர்த்தாசலம். எல்லா ஸ்ரோவரங்களிலும் ஸ்ரேஷ்டமான ரோவரம் அங்கிருப்பதால் அது புஷ்கராத்ரி. யமன் இங்கு வந்து தபஸ் செய்து பகவானின் அனுக்ரகத்தைப் பெற்றதால் இது வருஷாசலம் (வ்ருஷ என்றால் யமன்). தங்கமயமான மேருமலையின் மகனாதலால் இது கனகாசலம். நாராயணன் என்ற பண்டிதன் இங்கு வந்து தவம் செய்ததால் இது நாராயணாத்ரி. கருடன் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்ததால் இது வைகுண்டாசலம். நரசிம்ஹன் இங்கு அவதரித்ததால் இது சிம்ஹாசலம். வராக தேவரின் சன்னிதானம் இங்கிருப்பதால் இது வராகாசலம். ராமாயணத்தில் வரும் நிலன் என்ற கபி இங்கு வந்து தவம் செய்ததால் இது நீலகிரி. பகவத் பக்தர்கள் இங்கு பகவானுடன் சேர்ந்து ஆனந்தத்தை அனுபவிப்பதால் இது ஆனந்த கிரி. மஹாலஷ்மியின் சன்னிதானம் இருப்பதால் இது ஸ்ரீசைலம். ஸ்ரீனிவாசனின் சன்னிதானம் இருப்பதால் இது ஸ்ரீனிவாசகிரி. இப்படி அநேக பெயர்களை வராக புராணம் சொல்கிறது. இதுபோன்ற பல அரிய தகவல்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கொண்டு நன்கு புரியும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம். நன்றி: தி இந்து, 13/2/2014.  

—-

ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆன்மிக உவமைகள், தொகுப்பாசிரியர்-எஸ். விஸ்வநாதன், அருள்மிகு அம்மா பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 120ரூ.

வீட்டுவேலை, பொதுப்பணிகள், ஆசாரம் என்பதன் விளக்கம், ஆலிலைத் தத்துவம், உபவாசத்தின் உயர்வு, குரு சிஷ்யம் தொடர்ப்பு, அதிகாலையில் குறிப்பதன் பலன், சாஸ்திரமும் விஞ்ஞானமும், பகவத் கீதையின் மகிமை என சின்னச் சின்ன உவமானங்களால் பெரிய பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிக எளிமையாக சொன்னவர் மகா பெரியவர்.அவற்றை அழகுறத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: சக்தி விகடன், 22/1/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *