வீர சாவாக்கர்
வீர சாவாக்கர், மொழிபெயர்த்தவர் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
அகிம்சை வழி நல்லதுதான். ஆனால் கொடூரமான எதிரிகளிடம் அகிம்சை முறை சரிப்பட்டுவராது என்ற கொள்கையுடைய சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்போல, இந்தியாவின் சுதந்திரத்திற்காக, சாவாக்கர் நடத்திய ஆயுதப்போராட்டம் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் கொடுமையான தண்டனைகள், தியாகிகள் அனுபவித்த சித்ரவதைகள், பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.
—-
திருமணப் பொருத்தம், துபாய் டி. ராமகிருஷ்ணன், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ.
நட்சத்திர பொருத்தம் தவிர திருமணத்திற்கு எந்தெந்த பொருத்தங்கள் பார்க்கவேண்டும் என்று அனுபவ விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் எளிமையாக தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.
—-
எளிய வீட்டு வைத்திய கை முறைகள், செந்தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
தலைவலி, ஜலதோஷம், காது வலி முதலியவற்றுக்கு மூலிகை வைத்திய முறைகளைக் கூறுகிறார் ஆசிரியர் சிவசித்தன். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/4/204.