ஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள்.
இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘
—-
மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு.
பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய முதல் நூல். அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அடிப்படைகளைக் கற்றுத் தந்த நூல். நன்றி: தி இந்து, 22/4/2014.
—-
உழவுக்கு உண்டு வரலாறு, நம்மாழ்வார், விகடன் பதிப்பகம். கடந்த 50 ஆண்டுக் காலத்தில் நமது விவசாயம் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்றும், பசுமைப் புரட்டசி நிகழ்த்திய வன்முறை பற்றியும் பேசுகிறது இந்த நூல். நாம் இழந்தவை என்ன, மீட்டெடுக்க வேண்யவை என்ன, இயற்கை வேளாண்மையின் நன்மைகள் பற்றி நம்மாழ்வார் விரிவாகக் கூறியிருக்கிறார். நன்றி: தி இந்து, 22/4/2014.