தியாகசீலர் கக்கன்
தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ.
எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் புராளமல் வாழ்ந்து காட்டிய பெருமை கக்கனுக்கு உண்டு. அவரது வாழ்க்கை நமக்குப் பாடம் என்பதை நூல் முழுதும் நிறுவியுள்ளார் இளசை சுந்தரம். இன்றைய தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட வேண்டிய பாடம் இது. நன்றி: குமுதம், 21/5/2014.
—-
ஆறுகாட்டுத் துறை, நியூ செஞ்சுரி பு ஹவுஸ், சென்னை, விலை 240ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-8.html மீனவர் சமுதாயத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். இதில் எளிமையான மீனவப் பெண்ணான சமுத்திரவல்லி என்பவரின் குடும்ப வாழ்க்கையும், நிர்வாகத் திறமையையும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் ஆசிரியர் சு. தமிழ்ச்செல்வி வழங்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.