இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 336, விலை 190ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி, இந்துக் கலாச்சாரத்துடன் ஒன்றாகக் கலந்து சகோதரத்துவத்துடன் அவர்கள் ஆட்சி செய்தது வரையான ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். ஆங்கிலயர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் வரலாற்றைத் திரித்து எபதிதப்பான அபிப்ராய பேதங்களை உருவாக்கிவிட்டுச் சென்றனர். இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்தது. அந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து உண்மையை விளக்கி, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நல்நோக்கத்தில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூக மாணவர்களுக்கும் முஸ்லிம் மன்னர்கள் பற்றிய உண்மையை உரைக்கும் நூல். நன்றி: குமுதம், 4/6/2014.
—-
ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில்-மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, பக். 270, விலை 180ரூ.
ஆஸ்திரேலிய ஆதிவாசிகளிடம் வாய்மொழியாக, கர்ண பரம்பரையாய் வழங்கி வந்த கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்துள்ளார் மாத்தளை சோமு. கதையில் வரும் சம்பவங்கள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை தமிழக ஆதிவாசிகளின் வாழ்வியல் முறைகளோடு ஒட்டிப்போவதைக் காணமுடிகிறது. இந்தியக் கண்டத்திலிருந்து சென்று குடியேறிய திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களே ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் கதையாகட்டும் பழிவாங்கும் கெக்கும் காகமும் கதையாகட்டும் தமிழ்ப் பழங்குடி கதைகளை ஒட்டியே உள்ளன. ஆய்வாளர்களுக்கு உதவும் நூல். நன்றி: குமுதம், 4/6/2014.