ஜீவா பார்வையில் பாரதி
ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த நூல் மிகச் சிறந்த சான்றாகும். நன்றி: தி இந்து, 5/7/14.
—-
ஜாதியை அழித்தொழிக்கும் வழி, டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு-கருப்புப் பிரதிகள்-டாக்டர் அம்பேத்கர் சமூகப் பொருளாதார அறக்கட்டளை வெளியீடு, சென்னை.
சாதிதான் இந்துக்களின் உயிர்மூச்சாக இருக்கிறது என்பதில் எள்ளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்த தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசுபடுத்திவிட்டார்கள். சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் இந்தச் சாதி நோய் தொற்றிக்கொண்டுவிட்டது. எனவே சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லா தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவு பெறமுடியும். சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான போராட்டத்தைவிட உங்கள் போராட்டம் கடுமையானது. நன்றி: தி இந்து, 5/7/14.