தி மியூசிக் ஸ்கூல்
தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33.
The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு உதவியாக இருக்கும். படித்து முடித்ததும், பக்கத்தில் ஒரு நோட்டில் நினைவில் நிற்கிற விஷயங்களை எழுதிப் பாருங்கள். நாம் இசையைக் கற்கும்போது அது எல்லோருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. நாம் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த பிறகு, நீங்கள் ஒரு பொது இடத்தில் இசையை வாசிக்கும்போது எல்லோருக்கும் தெரியத்தான் போகிறது. அதுவரை அமைதியாக இருப்பது நல்லது. ஸ்வரங்கள், மேற்கத்திய ஸ்வரங்கள், ஸ்வரங்களின் உச்சரிப்பு, இசைக்கருவி, ஸ்தாயி, மத்யமம், ஆரோகணம், அவரோகணம், வாசிப்புக்குறியீடு, நொட்டேஷன்… அப்பப்பா எதையும் விட்டு வைக்கவில்லை செழியன். நொட்டேஷனில், புள்ளி வைத்துக் குறிக்கிறார்களா? இல்லை. பிறகு எப்படி என்கிறீர்களா? பொறுங்கள். அதுதான் அடுத்த பாடத்தில் படிக்கப்போகிறோம் நாளை சந்திகலாமா? வணக்கம் என்று வகுப்பில் பாடம் நடத்துவது போன்ற நடையில் எழுதியிருப்பதுதான் இந்தப் பத்துத் தொகுதிகளின் சிறப்பே. பதினைந்து வருடக் கடின உழைப்பு பத்து வால்யூம்களிலும் தெரிகிறது. – சாருகேசி. நன்றி: கல்கி, 11/5/2014.
—-
பயத்திலிருந்து விடுதலை, தமிழாக்கம்- எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
தத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகள், மற்றும் அவர் நண்பர்களுடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றில் இருந்து இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பயம் என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அந்த பயத்தை எப்படி எதிர்கொள்வது, கல்வியின் மூலம் பயத்தை விலக்கிக்கொள்வது எப்படி என்பது போன்றவை எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. தன்னம்பிக்கை பெறத்துடிப்பவர்கள் படிக்க வேண்டிய சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.