மோடி
மோடி, வெளிச்சங்களின் நிழலில், கதிரவன், சிற்றுளி வெளியிடு, சென்னை, விலை 25ரூ.
மோடி முகமூடி அணிந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்திருக்கும் இந்நூல், நாட்டில் இந்துத்துவக் கொள்கைகள் நிகழ்த்துப்போகும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 6/4/2014.
—-
க்ரோஷம், ஜுடித் பெல், வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், பக். 280, விலை 160ரூ.
உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம் டபிள்யூ.டி.ஓ., எப்.டி.ஏ., என்.ஏ.எப்.டி.ஏ., போன்ற பல ஒப்பந்தங்கள் மூலம், உலகளாவிய சந்தையை உருவாக்க முயல்கின்றன. தாராளச் சந்தை ஆதரவாளர்களின் கூற்று, நாடுகளிடையே உள்ள வர்த்தகத் தடைகளை தளர்த்துவதால் அல்லது முற்றிலும் அகற்றிவிடுவதால் நுகர்வோர் பெரும்பயன் அடைவர் என்பதே. அதனால், உலகின் செல்வம் அதிகரித்து, புதிய தொழில்நுட்பம் வளர்ந்து, இந்த போக்கு உலகம் முழுவதும் பரவி, நாடுகளிடையே அமைதி நிலவி, உறவுகள் மேம்படும் என்று சொல்கின்றனர். ஆனால் அது உண்மையா? தாராள வர்த்தகத்தின் பயன்கள் சமமாகவும் சீராகவும் பகிர்ந்து அளிக்கப்பட்டதா என்றால், இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் ஜுடித் பெல். தனி ஒரு பெண்ணாக, பணபலம் மற்றும் அரசியல் பாதுகாப்பு கொண்ட பெருநிறுவனங்களுக்கு எதிராக தன் போராட்டத்தை விறுவிறுப்புடன் விவரிக்கிறார் பெல். அவர் ஆங்கிலத்தில் எழுதி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஐ சீ ரெட் என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். -சிவா. நன்றி: தினமலர், 3/8/2014.