மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்றவரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மஹா பெரியவருக்கு வயது 85. இந்த யாத்திரையின்போது, என்னென்ன நடந்தது, யார் யார் ஸ்ரீ பெரியவரை தரிசனம் செய்தார்கள், எந்தெந்த வழியாக எங்கெல்லாம் சென்றார்கள், வழியில் என்ன விஷயங்கள் பேசப்பட்டன… போன்றவற்றின் தொகுப்பே இந்நூல். மஹா பெரியவரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், இது அவரைப் பற்றி யதார்த்தமாகவும் உள்ளது உள்ளபடியாகவும் கூறுகிறது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி கடைக்கோடி மனிதனாக இருந்தாலும் சரி, பாகுபாடின்றி அவர்களைச் சரிசமமாகப் பாவித்தது முதல், அவர்களுடன் உரையாடியது எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. ஒருமுறை பிரதமர் இந்திரா காந்தி மஹா பெரியவரை தரிசித்தபோது நடத்த உரையாடலில் உண்மையான ஞானியை எப்படி அறிவது? என்ற இந்திராவின் கேள்விக்கு, யதார்த்தமான ஒரு நிகழ்ச்சி மூலம் புரிய வைத்தார். இதுபோன்ற பல சம்பவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் அரிய புகைப்படங்களுடன் படிக்கப் பரவசமூட்டும் இந்நூல், காஞ்சி மஹா பெரியவரின் பக்தர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 17/9/2014.  

—-

சொல்லாயணம் கவிதைகள், ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், சென்னை, பக். 144, விலை 125ரூ.

கவிஞர் தாம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்த விஷயங்களை அழகியல் ரசனையுடன் கவிதைகளாக்கித் தந்துள்ளார். இரவுத்திருடர்கள் கவிதை வழி இன்றைய பகற்கொள்ளையை நமக்கு உணர்த்தும் அங்கதம் ஒன்று போதும். கவிஞரின் கவி உள்ளத்திற்கு, பொருளாதாரக் கொள்கையில் அரசின் தவறான போக்கை பாடுபவர், புகுந்த வீடு செல்லும் பெண்ணின் கண்ணீரையும் நம் மனதில் கசியவிடுகிறார். மொத்தத்தில் அவர் பாடாத விஷயமில்லை. அத்தனையிலும் நேர்மை உண்டு. நன்றி: குமுதம், 17/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *