கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் வெளிவந்த மோடியின் இந்த நூல், தற்போது கோவை சப்னா புத்தக நிலையத்தாரால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமராவதற்கு முன்பு எழுதிய, இந்த குறிப்புகளைத் தான் பிரதமரானதும் மோடி வெளிப்படுத்தியுள்ளார். இதுபோல கல்வி குறித்து மேலும் பல விஷயங்கள் இவரது மனதில் உள்ளன. அதனை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவும். -எல். முருகராஜ். நன்றி: தினமலர், 7/9/2014.  

—-

நான் வந்துவிட்டேன், ஒய். செய்யது முகம்மது, முகம்மது தாஹா பதிப்பகம், திருநெல்வேலி, விலை 40ரூ.

இறைவனை நோக்கியே தனது பயணத்தை கவிதை வடிவத்தில் தந்துள்ளார் நூல் ஆசிரியர். ஆங்கிலம் அரபு தமிழ் என மூன்று மொழிகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நூல் ஆசிரியர் கல்லூரி ஆங்கில பேராசிரியர் என்பதால் முதலில் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி, பின்னர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். அவரது நண்பர்கள் குழு அதை அரபியில் மொழி பெயர்த்துள்ளனர். இறைவன் குறித்த சிந்தனை, சொர்க்கத்தை தேடிய பயணம், மனித வாழ்க்கையின் பல்வேறு மகங்கள் என தனது எண்ணங்களையும், அனுபவங்களையும் நூலாசிரியர் கவிதையாக்கி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 10/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *