யாரும் காணாத உலகம்
யாரும் காணாத உலகம், கோவி. லெனின், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 45ரூ.
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-335-6.html பத்திரிகையாளர் கேவி.லெனின் ஒரு கவிஞரும்கூட என நிரூபிக்கும் நூல் இது. எளிய வார்த்தைகளில் சமூக அக்கறையும், பால்யத்தின் நினைவுகளும், காதலும் விரவிக்கிடக்கும் கவிதைத் தொகுப்பு இது. இயற்கையை கவிதைக்கு துணைக்கு அழைத்துக் கொள்ளும் கவிஞரின் சொற்கள் மிக இயல்பாக உள்ளன. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.
—-
மார்க்சிய சூழலியல், அருண் நெடுஞ்செழியன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ.
மார்க்சிய சூழலியல் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவே. சூழல் மாசுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகவும் வரலாற்று ரீதியிலும் மார்க்சிய நோக்குடன் விளக்குகிறார் ஆசிரியர். மார்க்ஸ் ஏங்கல்ஸ் மூலம் எந்த நிகழ்வையும் சரியாக அணுக இயக்கவியல் வழிமுறைகள் நூலில் விளக்கப்பட்டுள்ளன. நன்றி: இந்தியா டுடே, 8/10/14.