தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ.

மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் செய்தியியலும், தொடர்பியலும், ஊடகவியலும் அடைந்த பரிணாம வளர்ச்சிகளை தெள்ளத் தெளிவாக சுவாரசியமான காட்சி வடிவங்களாக அரங்கேற்றியிருக்கிறார் முனைவர் வெ. நல்லத்தம்பி. அனைத்து தொடர்பியல்சார் மாணவர்களும், பேராசிரியர்களும், இதழாளர்களும், ஊடகங்களில் பணிபுரிபவர்களம் படித்துப் பயன்பெறத் தக்க நூல். நன்றி: தினத்தந்தி.  

—-

தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறக்கட்டளைகள் சட்டம் 1959, சி. தர்மராஜ், வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

ஆரம்ப காலத்தில் கோவில்களை அரச குடும்பத்தினர் மற்றும் பிரதிநிதிகள் நிர்வகித்து வந்தனர். 1927ம் ஆண்டுக்கு பிறகு அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இதற்காக நாடு விடுதலையானதற்கு பிறகு 1951 மற்றும் 1959ம் ஆண்டுகளில் தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்களே தற்போது நடைமுறையில் உள்ளன. அதுபற்றிய விவரங்கள் கொண்ட நூல் இது. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *