புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு வந்துவிடுமோ என்று தினசரி செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்று ஆணித்தரமாகவும் பதிவு செய்துள்ளார். இந்த நூல் நாம் புரட்டும் புத்தகமாக இல்லாமல், நம்மை புரட்டும் நூலாக திகழ்கிறது. அனைவரும் படித்து சுவைக்க வேண்டிய நூலாகும். நன்றி: தினத்தந்தி.  

—-

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 125ரூ.

To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-0.html மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் எத்தனையோ ஆச்சரியமான அபூர்வமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார் வடுவூர் சிவ. முரளி. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை, அதிகம் பேர் அறியாதவை. எனவே அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் காந்தி 1948 ஜனவரி 30ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன் அவர் கலந்து கொண்ட பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் பிர்லா மாளிகையின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. ஆனால் உயிர்ச்சேதம் இல்லை. வெடிகுண்டு வீசிய மதன்லால் பாவா என்னும் பஞ்சாபி இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அகதி. கைது செய்யப்பட்ட அந்த இளைஞனை தண்டிக்கவோ, வெறுக்கவோ செய்யாதீர்கள். நாம் தீயவர் என்று ஒருவரை நினைப்பதாலேயே, அவரை தண்டிக்கும் உரிமை நமக்கு இல்லை என்றார் காந்தி. இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *