ஏர்வாடியார் கருவூலம்

ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ. கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 120ரூ. முற்போக்கு சிந்தனைக் கொண்ட நூலாசிரியர், உணர்வு பூர்வமான, சிந்திக்க கூடிய தலைப்புகளில் கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா? என்ற ஆழமான பல்வேறு கருத்துகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

புத்தகம் போற்றுதும்

புத்தகம் போற்றுதும், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும் என்ற வரிசையில் தற்போது வித்தியாசமான தலைப்பான புத்தகம் போற்றுதும் என்ற தலைப்புடன் 50 நூல்கள் மற்றும் நாவல்களை நூலாசிரியர் விமர்சனங்களாக எழுதி தொகுத்துள்ளார். இதில் எழுத்தாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ. இறையன்பு எழுதிய அவ்வுலகம் என்ற நாவலை விமர்சனம் செய்யும்போது இறந்தவர்களின் நெற்றியின் மீது ஐந்து ரூபாய் நாணயம் என்ற மூடப்பழக்கத்தை, தனக்குரிய பாணியில் நூலாசிரியர் சாடியுள்ளதையும் சுவைப்பட விமர்சனம் செய்துள்ளார். எனக்குச் சாவு […]

Read more