அப்துல்கலாம் பொன்மொழிகள்
அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ.
தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.
—-
ஹைக்கூ முதற்றே உலகு, கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 100ரூ.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு, ‘புலிப்பால் ரவி’ என்ற வீரப்பெயருடன் அழைக்கும் இந்த நூலாசிரிய தொகுத்துள்ள ஹைக்கூ கவிதைகளில், குறிப்பாக தலைநகர் மழை கவிதைகள் உள்பட அனைத்தும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.