சமுதாய வீதி
சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 100ரூ.
நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி நம் கண் முன் நடமாட விட்டவர் தீபம் நா. பார்ததசாரதி. சினிமா உலகில் நுழைய விரும்பி, சினிமா துறையில் அடியெடுத்து வைத்து, நல்ல மனிதனாக வாழ்ந்த கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. நா.பா.வின் இந்த சமுதாய வீதி அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாவல். தற்போது அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.
—-
வரலாற்று நாயகர் தந்தை பெரியார், எம்.எஸ். தியாகராஜன், மகேஸ்வரி பதிப்பகம், பெரிய காஞ்சிபுரம், விலை 280ரூ.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் உலகின் பல நாடுகளிலும் உன்னதம் வாய்ந்த யுகப்புருஷர்கள் தோன்றுவார்கள். அந்தவகையில் நமக்கு கிடைத்தவர் தந்தை பெரியார். சமுதாயத்திற்கு அவர் ஆற்யி பணிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய படைத்தள பதிகள் விபரம், பகுத்தறிவு இயக்கத்தின் சொற்பொழிவாளர்கள் ஆகிய 3 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.