நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு
நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்களுக்கு மிகவும் பயன்தரத்தக்க நூல்களை வெளியிட்டு வரும் பொக்கிஷம் வெளியீடு, தற்போது நுகர்வோருக்குப் பயன்படும் இந்நூலையும் வெளியிட்டுள்ளது. இன்றைய வர்த்தக உலகில், நாம் காசு கொடுத்து வாங்கும் எந்தவொரு பொருளும், சேவையும் நமக்குத் திருப்தி அளிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மாயையில் சிக்குண்டு ஏமாந்துவிடுகிறோம். ஒரு பொருளை வாங்கிய பின்பு, அதிலுள்ள குறைபாட்டிற்கு நிவாரணம் தேடி அலைவதைவிட, குறைபாடுள்ள பொருள்களை வாங்காமல், நல்ல தரமானப் பொருட்களை, சேவைகளை எப்படிப் பெறுவது என்பதை இந்நூல் விளக்குகிறது. பொருளை வாங்கிய பின்பு அதில் குறையிருப்பது தெரிய வந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதையும் இந்நூல் எளிய முறையில் விளக்குகிறது. தவிர, இந்நூலில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் நீதிமன்றங்கள், தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் போன்றவற்றின் விவரங்களும், எந்தெந்தக் குறைபாட்டிற்கு எங்கெங்கு செல்வது? அதனுடைய முகவரி, தொலைபேசி மற்றும் ஈ.மெயில் போன்றவை எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. இல்லப் பொருட்கள் நுகர்வோர், மின் நுகர்வோர், விவசாய நுகர்வோர், சமையல் எரிவாயு நுகர்வோர், போக்குவரத்து நுகர்வோர், குடியிருப்பு நுகர்வோர், மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் உரிமைகள் என்று அனைத்து நுகர்வோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 29/10/2014.