முதுமையை வெல்வோம்
முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ.நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், திருப்பூர், சென்னை, விலை 100ரூ.
முதியோர் நல மருத்துவரான நூலாசிரியர் முதியோர்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவே இதனை தொகுத்துள்ளார். அத்துடன் முதியோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், முதிய பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி கடைபிக்க வேண்டிய உணவுப்பழக்கம், நோய்களைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை, ஏற்கனே வந்துவிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், குறிப்பாக முதிய வயதில் பெண்களைத் தாக்கும் பிரத்யேகப் பிரச்சினைகள் என அனைத்து விஷயங்கள் பற்றியும் முழுமையான ஆலோசனைகளை இந்த நூலில் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/11/2014.
—-
தமிழ் இலக்கியங்களில் உளவியல், ஓ.சோமசுந்தரம், அந்திமழை, சென்னை, விலை 220ரூ.
தமிழ் இலக்கியங்களில் உளவியல் தொடர்பாக, ஆங்கிலத்திலும், தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நூலாகும். குறிப்பாக, கலாச்சாரம், இலக்கியம், இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம், பக்தி இலக்கியங்களில் உளவியல் மற்றும் கண்ணதாசன், பாரதியார் வாழ்வில் உளவியல் கருத்துக்கள் குறித்து விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு முதல் அமைச்சர்களும் உளவியல், மனநோய்கள், அண்ணாவின் கண்ணோட்டம் என்ற தலைப்பிலான கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை தரும். நன்றி: தினத்தந்தி, 12/11/2014.