தாய்ப்பால் இங்கே கசக்கிறது
தாய்ப்பால் இங்கே கசக்கிறது, சுரபி விஜயா செல்வராஜ், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-357-0.html அமரரான அமராவதி நதி தாய்ப்பால் இங்கே கசக்கிறது என்ற இந்த தொகுப்பில் 19 சிறுகதைகளை பதிவு செய்திருக்கிறார் சுரபி விஜயா செல்வராஜ். உள்ளே என வரிசையாக சொல்லப்படும் இவற்றில் புத்தகத்தின் தலைப்பில் உள்ள தாய்ப்பால் இங்கே கசக்கிறது என்ற டைட்டிலை தேடாதீர்கள். இருக்காது. உள்ளீடாக இந்தக் கதைகளில் பெரும்பாலும் அம்மாக்களின் துயரங்கள், பாச பிணைப்பு, இழந்து போன வாழ்க்கை போன்றவைதான் அதிகமாக இருக்கின்றன. அதனாலோ என்னவோ தாய்ப்பால் இங்கே கசக்கிறது. அம்மாவுக்கு இனி டாக்கடர் தேவையில்லை என்ற ஒரு கதையே இதற்கு உதாரணம். அதுபோல் அமராவதி நதி அமரராகிவிட்ட காலக் கொடுமையை பிரசார தொனியிலேயே சொல்கின்றன கரைந்த லட்சியங்கள். பிரணவ மந்திரம் போன்ற கதைகள் கிராம மண்ணிலேயே பிறந்து வளர்ந்து அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, குதூகலப்பட்டு பின்னர் வெம்பி, ஆவேசப்பட்டு இழந்துபோன அதன் ஆன்மாவின் வறுமையைக் கண்டு கண்ணீர்விட்டு கொங்குமொழியின் கொச்சையோடு படைத்திருக்கிறார் விஜயா. நன்றி: அந்திமழை, 1/11/2014.