ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.

நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் எம்.ஜி.ஆருடனான நெருக்கம், நீதியரசர் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், சத்யசாயிபாபாவிடம் நீதியரசர் காட்டும் பக்தி போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நூலைப் படிப்பவர்களின் வாழ்வுக்கு ஒரு நல்ல வழி காட்டுவதுடன் நீதியின் ஒளி பாய்ச்சும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.  

—-

நோயுற்றவரை பராமரிக்கும் வழிகாட்டி, பி. அங்கயற்கண்ணி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

மருத்துவம் பற்றிய சிறந்த நூலை செவிலியர் நெறிமுறைகளும், நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும் என்ற தலைப்பில் நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நோய்கள் பற்றிய விவரங்கள், அந்நோய் வந்தவர்களை பராமரிக்கும் வழிமுறைகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *