புதிய எக்ஸைல்
புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், செடி, கொடி, பூனை போன்ற பல்லுயிர்களின் மீதான பேரன்பு, ஒவ்வொரு எழுத்திலும் உள்ளது. குறிப்பாக நாய் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. மொத்தத்தில் புதிய எக்ஸைல் புதிய தரிசனம். நன்றி: தினமலர், 09/1/2015.
—-
மீதமிருக்கும் சொற்கள், அ. வெண்ணிலா, அகநி பதிப்பகம், பக். 487, விலை 500ரூ.
தமிழ் இலக்கியத்தில், சிறுகதை என்ற வடிவம் அறிமுகமாகி, 85 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஆண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஆவணப்படுத்தப்பட்ட அளவுக்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஆவணப்படுத்தப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில், 85 ஆண்டுக்கால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், கால வரிசைப்படி இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வை.மு, கோதை நாயகி அம்மாள் முதல், கவிதா சொர்ணவல்லி வரைக்குமான, 54 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கி உள்ளன. இந்த நூல் புனைகதை தொகுப்பாக மட்டுமின்றி, காலந்தோறம் பெண்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறி வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆவணமாகவும் விளங்குகிறது. நன்றி: தினமலர், 12/1/2015.