உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள், திருமலை அம்மாள், உஷா பிரசுரம், பக். 160, விலை 120ரூ.
இன்றைய நிலையில் பெண்கள், படித்து வேலைக்கு சென்று, தங்கள் சொந்த காலிலேயே நிற்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டாலும், அவர்கள் சார்ந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. அவை, காலத்துக்கேற்றபடி வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன. அவற்றில் மாமியார் – மருமகள் பிரச்னையும் ஒன்று. இந்த பிரச்னையை உலகளாவிய பிரச்னையாகவே இந்நூலாசிரியர் பார்க்கிறார். மாமியார்களை ஐந்து வகையினராக பிரிக்கிறார். அவர்களை சமாளிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார். புதுதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி, மாமியாரை புரிந்து கொள்ளமால் தவிக்கும் பெண்களுக்கும் இந்த நூல் உதவும். நன்றி: தினமலர், 21/1/2015.
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள், எஸ். வீரண்ணன், விஜயா பதிப்பகம், பக். 432, விலை 300ரூ.
ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி, ரோமியா-ஜுலியட், ஹேம்லெட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற புகழ்பெற்ற நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலில், சுபமுடிவு நாடகங்கள், சோகமுடிவு நாடகங்கள் என்ற இரு பிரிவிலான நாடகங்களை மட்டுமே ஆசிரியர் கொடுத்திருக்கிறார். நாடகங்களின் தலைப்புகளை அப்படியே நேர்மொழிபெயர்ப்பாக கொடுக்காமல், அவற்றின் உள்ளடக்கத்திற்கு ஏற்றபடி தமிழிலேயே தந்திருக்கிறார் நூலாசிரியர். கதைகளை எளிய தமிழில் விறுவிறு நடையில் மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தினமலர், 21/1/2015.