குழந்தைகளின் அற்புத உலகில்
குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ.
குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய கதைகளாக இருக்க வேண்டும். இதனால் அவேர்களது சிந்தைனையும் அறிவாற்றலும் அதிகரிக்கும் என்கிறார் ஆசிரியர். குழந்தைகள் ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை நாம் தடுக்கும்போது அவர்களது கனவுகள் கருகிவிடுகின்றன. கல்வியை கசப்பாகத் திணிப்பதும், விளையாட விடாமல் முடக்குவதும் என்ற வரிகளின் உண்மை, நம் மனதைப் பிசைகிறது. சரயான நேரத்தில் குழந்தைகள் சார்பாக ஒரு குரல். நன்றி: தினமணி, 12/1/2015.