சவீதா நாவல்கள்
சவீதா நாவல்கள், நூல் கிடைக்கும் இடம் கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை, தனிப் பிரதி 225ரூ, ஐந்து தொகுதிகளுக்கும் விலை 800ரூ.
எழுத்தாளர் சவீதா எழுதிய 18 நாவல்கள், 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. காதல், கிரைம், குடும்பம் என்று எதை மையமாக வைத்து எழுதினாலும் கதைப்போக்கிலும், எழுத்து நடையிலும் வித்தியாசங்களை விதைப்பதால், கூறியது கூறல் என்ற குறைபாடு எழவில்லை. ஒவ்வொரு நாவலிலும் காணப்படும் நகைச்சுவை, நவீன உவமைகள், நடையில் வேகம், எழுத்தில் லாவகம் வாசகர்களை வசியப்படுத்தும். துள்ளலும், துடிப்பு மிகுந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.
—-
அன்பின் வெற்றி, ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
சிறுவர் – சிறுமியர்களுக்கான கதைகள் கொண்ட புத்தகம். ஒவ்வொரு கதையிலும் சிறந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார் புலவர் நன்னன். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.