பாலச்சந்திரனின் இறுதியுணவு
பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ.
நம் காலத்தின் கவிதைகள் சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன. எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் என்பதை இவரது ‘மண்’ கவிதை துயரத்துடன் பேசுகிறது. எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி உருவாக்கப்படும நகரத்து ஆடம்பரங்களையும், மற்ற மனிதர்கள் மேல் நாம் காட்டும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகிறது ‘நறுமணங்களுக்கு அப்பால்’. நவீன ஜனநாயகமும் அறிவியலும் விடுதலைக் கோட்பாடுகளும் மக்களுக்குச் சுதந்திரத்தையும் நிம்மதியையும் தரவில்லை என்ற ஏக்கத்தை இவர் கவிதைகள் ஏக்கத்துடன், எள்ளலுடன், துயரத்துடன் முன்வைக்கின்றன. எந்த மாற்றங்களும் மனிதனின் அடிப்படைகளை மாற்றவில்லை என்பதை நாயகர்களின் வருகை சொல்கிறது. “அரசர் வருகிறார்! அரசி வருகிறார்! இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்! தெருப்புழுதி பறக்கத் தேர்கள் விரைகின்றன. நரம்புகள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம். தேர்க்கால்களின் கன்றுகள் அடிபடுவது பற்றிக் வலையில்லை. 108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.” என்று தொடங்கும் கவிதை நெருக்கடிநிலைக் காலகட்டத்தைப் பற்றி கவிதை எழுதிய ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இன்னமும் நெருக்கடிநிலைக் காலகட்டம் தொடர்கிறது. -வினுபவித்ரா. நன்றி: தமிழ் இந்து, 7/3/2015.