நெப்போலியன்
நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் 48 கோப்பைகள் காபி குடிப்பார், கடிதம் எழுதுவதில் பெருவிருப்பம் – மொத்தம் 33 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார். தினமும் 4 மணி நேரம் மட்டுமே தூக்கம், செடி கொடிகள் மீது உயிர் – தோட்டத்தில் ஆடு, கோழிகள் நுழைந்தால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வார் இது போன்ற சுவாரசியமான செய்திகள். நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் வெற்றி உறுதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
இன்றைய தலைமுறையினர் படித்து முடித்ததும் அரசு வேலைக்கு செல்வது மிகவும் கடினம். பல்வேறு தேர்வுகளை சந்தித்து, ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் மட்டுமே நாம் அங்கு கால் பதிக்க முடியும். தேர்வுகளை எழுத காத்து இருப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த வெற்றி கையேடாக விளங்குகிறது. மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகள் பற்றிய குறிப்புகள், அவற்றிற்கான பாடத்திட்டம், போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது பற்றிய சுவையான தகவல்கள், பொது அறிவுக் கேள்விகள், பொதுத்தமிழ் கேள்விகள், அதற்கான விடைகள் போன்ற விவரங்கள் அடங்கிய ஒரு தகவல் களஞ்சியத்தை வழங்கி உள்ளார் ஆசிரியர் நெல்லை கவிநேசன். நன்றி: தினத்தந்தி, 11/3/2015