பொன் வேய்ந்த பெருமாள்
பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ.
சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
மனதை பார்மட் செய்யுங்கள், காம்சேர் கே. புவனேஸ்வரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 160ரூ.
நம் மனதில் உள்ள தேவையற்ற குப்பைகளை தூக்கி எறியவும், நம் மனதை நெறிப்படுத்தவும் பார்மட் செய்ய பயனுள்ள நூலாகும். ஆரோக்கியமான உடலில் இருந்து ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். எனவே உடலை காத்து மனதைப் போற்றுவோம் என்ற உயரிய வரிகளுடன் எளிய நடையில் வாசகர்களை ஆரோக்கியப்படுத்தும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/5/2015