வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்
வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள், எடையூர் சிவமதி, வானவில் புத்தகாலயம், சென்னை, பக். 304, விலை 222ரூ.
புகழ்பெற்ற திருக்கோயில்கள் பற்றி அவற்றின் தொன்மை, ஆன்மிகச் சிறப்பு, வரலாறு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆன்மிகக் களஞ்சியமாக அமைந்துள்ளது இந்த நூல். சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி மலையின் தெய்வங்கள், கல்விக் கடவுளான கூத்தனூர் சரஸ்வதி ஆலய தரிசனம், துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயில், பேட் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தம் மனைவியரோடு வசித்த வீடுகள் பற்றிய செய்திகள் அபூர்வமானவை. அமெரிக்கா, பிட்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமானின் அழகிய திருக்கோயில் பற்றிய விவரங்கள், விழுப்புரத்தை அடுத்துள்ள கல்பட்டில் 21 அடி உயர திருமேனியுடன் விளங்கும் சனீஸ்வர பகவானின் அரிய தரிசனம் குறித்த செய்திகள் என ஆன்மிக அன்பர்களுக்கு தெய்வீக விருந்து படைத்துள்ளார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தொடங்கி, திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர், திருப்புல்லாணி ஆதி ஜகந்நாதர், சிங்கனாப்பூர் சனீஸ்வரர், கோவில்பட்டி ஸ்ரீ கனகதுர்கா, சோளிங்கர் அருகேயுள்ள நவக்கிரகக்கோட்டை என 56 கோயில்களின் மகிமைகள் இதில் சொல்லப்பட்டுள்ளன. தமிழகத்தின் சிறப்புமிக்க ஆலயங்களின் தகவல்களுடன் சைவ, வைணவ, சக்தி ஆலயங்களின் கதம்பமாக மணம் வீசும் இந்நூல், ஆன்மிக அன்பர்களுக்கான சுற்றுலா கைடு. நன்றி: தினமணி, 1/3/2015.