நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ.

பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. இவர் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வேளையில், கோவையில் ம.ரா.போ.குருசாமி என்ற இன்னொரு பேராசிரியர் பணிபுரிந்தார். பெயர்க் குழப்பத்தால் நடந்த சில நிகழ்சிகளை சுவைபட எழுதியுள்ளார். அவசியம் படிக்க வேண்டிய சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.

—-

தெய்வீக மலர்கள், மணிமேகலை சிதம்பரம், ஆனந்த நிலையம், சென்னை, விலை 160ரூ.

துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீஸா பாடல்களின் தமிழாக்கம். இந்நூலில் அனைவரும் அறியும் வண்ணம் அழகுற தரப்பட்டுள்ளது. அவ்வையின் விநாயகர் அகவலின் மூலமும்அதற்காக பொழிப்புரையும் அற்புதமாக இடம்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *