ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்
ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ.
பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 165ரூ.
நல்ல கற்பனையும், சிறந்த உணர்ச்சிகளும், உயர்ந்த நோக்கங்களும் குழந்தைகளின் மனத்தில் பதியுமாறு பல பாடல்களைப்பாடி தொகுத்தளித்துள்ளார் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. சிறந்த குந்தைகள் இலக்கியமான இந்நூலை பெரியவர்களும் படிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.