எட்டு கதைகள்

எட்டு கதைகள், இராஜேந்திர சோழன், வம்சி புக்ஸ், விலை 100ரூ.

சிறந்த சிறுகதைகள் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்ககளையும் பெற்றுவிட்டது. தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இரோஜந்திர சோழன் எழுதி,  எண்பதுகளில் வெளியான எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்களையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் தமிழ்நாட்டு கிராமிய வாழ்வுதான் இவரது கதை நிலப்பரப்பு. மனித வாழ்வை பொருளாதாரத்துக்கு அடுத்து நிர்ணயிக்கும் அச்சமாக இருக்கும் பாலியல் உணர்வு குறித்த நுட்பமான பார்வை இவரது கதைகளின் அடிப்படையாக இருக்கிறது. எட்டு கதைகள் தொகுதியில் உள்ள புற்றிலுறையும் பாம்புகள் தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இராஜேந்திர சோழனின் இதர படைப்புகள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செலாற்றியவர். அஸ்வகோஷ் என்ற பெயரில் நாடகங்களையும் எழுதியுள்ளார். மாற்று நாடக அரங்கம் குறித்து அரங்க ஆட்டம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். நெருக்கடி நிலை காலகட்டத்தில், விசாரணை என்ற இவரது நாடகம் பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன சொல்கிறார்கள்? இராஜேந்திர சோழன், தத்துவக் கோட்பாடுகளுக்குள் சுருங்க மறுத்து,தன் அனுபவச் செழுமையில் நின்று வாழ்வின் அவலங்களைக் காட்டும் துணிச்சலான கதைகளை எழுதியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார் சுந்தர ராமசாமி. -ஷங்கர். நன்றி: தி இந்து, 27/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *