நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024366.html தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம். ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் பலருக்கான படிப்பினை நிறைந்தது. உந்துசக்தியைத் தரக்கூடியது. பத்ரகாளி என்கிற திரைப்படம் பாதி வளர்ந்த நிலையில், கதாநாயகி ராணிசந்திரா, ஒரு விமான விபத்தில் இறந்துவிட, எப்படி மீதிப்படத்தை அவர் முடித்தார் என்பதை விவரித்திருப்பது, நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பைத் தருகிறது. ஏ.வி.எம். தனக்கு பணம் தரவில்லை என, எம்.ஆர்.ராதா சொல்ல, திருலோகசந்தர் இருதரப்பிலும் பேசி, தவறு எங்கு நடந்தது என்பதைக் கண்டறிந்த சம்பவத்தை விவரித்திருப்பது, சினிமாத் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்துகிறது. திரைப்பட ஆர்வலர்கள், அவசியம் படிக்க வேண்டிய நூல். -பாலகணேஷ். நன்றி: தினமலர், 19/7/2015.  

—-

மறக்க முடியாத வரலாறுகள், யுரேகா புக்ஸ், சென்னை, விலை 40ரூ.

17,18,19, 20ம் நூற்றாண்டில் வாழ்ந்து, உலகம் போற்றும் மாமனிதர்களாக போற்றப்பட்ட சர் ஐசக் நியூட்டன், வேலு நாச்சியார், லூயி ப்ரெயில், ரோஸா பார்க்ஸ் ஆகியோர்களைப் பற்றி முறையே கு. கலைச்செல்வன், டாக்டர் லட்சுமி விசுவநாதன், அனுராதா ரமணன் ஆகியோர் எழுதிய வாழ்க்கை வரலாற்று சுருக்கமே இந்நூல். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *