கவிதையும் கத்தரிக்காயும்
கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ.
கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் மரியாதையை கவிதைக்கும் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள் தமிழ்ப்பெருங்குடி மக்களே – என்கிறார் 2010-ல். தமிழ்ச்சமூகத்தில் மாறாதிருப்பது கவிஞன் மீதான புறக்கணிப்புதானே? நக்கீரன் வெளியீடான இத்தொகுப்பின் இறுதியில் கவிஞரைப் பற்றிக் குறிப்பு வருகிறது. அதில் அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் அவரது கவிதைப் போலவே சுவாரசியம். அதில் ஒன்று ஜலகன்னி – தம்போலோ – வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர்! நன்றி: அந்திமழை, 1/7/2015.