தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 150ரூ.
இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத சாதனையாக, தெற்கு ஆசியாவின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த மாமன்னர் ராஜேந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள், சுவையான நாவல் போல விறுவிறுப்புடன் ஆக்கித் தரப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாறு, மன்னர் ராஜேந்திரன் ஆட்சித் திறன், அவரது கப்பல் படை சாகசங்கள், இலங்கை மன்னன் மகிந்தனை போரில் வென்று கைதியாகக் கொண்டுவந்தது, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் எழுப்பப்பட்ட விதம், அவரது இறுதிக் காலம் எப்படி அமைந்தது போன்ற அனைத்து விவரங்களும், செப்பேடு, கல்வெட்டு ஆகியவற்றில் காணப்படும் ஆதாரங்களுடன் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.
—–
சுபயோகம் தரும் சுக்கிரன், என். நாராயணராவ், விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 30ரூ.
சூரியனுக்கு சுமார் 6 கோடியே 70 லட்சம் மைல்களுக்கு அப்பால் சுற்றி வருவது சுக்கிரன். இதை வெள்ளி என்றும் குறிப்பிடுவார்கள். ஆங்கிலப் பெயர் வீனஸ். சுபகிரகமான சுக்கிரன் பற்றிய அனைத்து தகவல்களும், ஜாதக ரீதியிலான பலன்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.