கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ.

வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.  

—-

சரசோதி மாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), முனைவர் பால. சிவகடாட்சம், முனைவர் கோ. விஜயராகவன், முனைவர் ஆ. தசரதன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ.

இது சோதிடம் பற்றிய பழமையான நூல். இது கி.பி. 1310-ஆம் ஆண்டில் பாடி, அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதன் இரண்டாம் பாகம் இது. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *