ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ.

வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் வேத அர்த்தத்தை நிர்ணயிக்கிறது என்றும், சரணாகதியின் மேன்மை, பிராட்டியின் புருஷாகாரத்தின் (பரிந்துரை) சிறப்பு, இதில் விளக்கப்பட்டுள்ளன. நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்களின் கருத்துகளை மேலும் தெளிவாக்க, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதியதுதான் ஆசார்ய இருதயம். மானிடர் பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்றும், நம்மாழ்வாரின் கொள்கையை வலியுறுத்துவதே இந்த நூலின் நோக்கம். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 9/8/2015.  

—-

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?, காம்கேர் கே. புவனேஸ்வரி, சூரியன் பதிப்பகம், விலை 125ரூ.

ஐ.டி. துறை வேலையில் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், டெக்னிக்கல் தேர்வு, எச். ஆர். இன்டர்வியூ ஆகியவற்றைத் தாண்டி வேறு சில விஷயங்கள் இருப்பவர்களே ஜெயிக்க முடிகிறது. அனுபவத்தின் வழியாகவே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் அந்த ரகசியங்களை ஒரு நிபுணரே சொல்லும் நூல் இது. நன்றி: குமுதம், 3/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *