தமிழுக்கு ஆஸ்கார்
தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ.
சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு வழங்கப்படுகிறது. எனவே, சிரமப்பட்டு உழைத்தால், ஆஸ்கார் பரிசு பெறலாம் என்று நம்பிக்கையூட்டுகிறார் ஆசிரியர். முக்கிய திரைப்படங்களின் புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
சமூகக் கட்டுப்பாட்டு படைப்பழகியல், நா. சந்திரசேகரன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ.
சங்ககாலத்தில் சமீப காலம் வரையில் தோன்றிய இலக்கியங்களைப் பற்றிய ஆழமான ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.