ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு, வெர்சோ பேஜஸ் வெளியீடு, புதுச்சேரி, விலை 200ரூ.
1979-ம் ஆண்டு புதுச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முடிவு செய்தார். இது அங்குள்ள மக்களின் உணர்வைக் கிளறி விட்டது. குடியரசு தினம் தொடங்கி 10 நாட்கள் புதுச்சேரி போராட்டக் கனமானது. இந்த நூலில், அந்த நிகழ்வுகளைப் பத்திரிகையாளர் பி.என்.எ ஸ். பாண்டியன் பதிவு செய்துள்ளார். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தோடு, புதுச்சேரியின் பிரதேச வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில் நடந்த பல்வேறு வெளிவராத சுவாரசியமான சம்பவங்களையும் அழகுற விவரிக்கிறார். ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. இது புதுச்சேரியின் சரித்திரத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் புதையல். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
பரமாச்சாரியார், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 80ரூ.
இந்துக்களால் பரமாச்சாரியார் என்று பக்தியுடன் அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் வரலாற்றைக் கூறும் நூல். நூற்றாண்டுகள் ஒழுக்க நெறியுடன் மக்கள் போற்றும் மகானாக வாழ்ந்த பரமாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ரா. வேங்கடசாமி சுவைபட வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.