சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
தேன்மிட்டாய், இரா. தமிழ்ச் செல்வன், இனிகா பதிப்பகம், கோவை, பக். 56, விலை 40ரூ.
எளிய கவிதைகள் அதே சமயம் சாதாரண மனிதர்களின் அடையாளங்களின் பிரதிபலிப்பாக உள்ளன.
எவ்வளவு அழகாக இருந்தாலும்
ஏழு நாள்தான்
உன் வாழ்வு என்பதை
மறந்து விடாதே…
என்ற கவிதை மனித வாழ்வின் முழு அர்த்தத்தையும் தாங்கி நின்று படிப்போரை சிந்திக்க வைக்கிறது. நம் வாழ்வோடு ஒன்றிணைந்து கிடக்கும் ஆடு, நட்பு, மாட்டு வண்டி, குடிசை வீடு, தேனிலவு, குடை, நம்பிக்கை என்று எல்லாவற்றையும் மனித வாழ்வோடு அர்த்தப்படுத்திப் பார்க்கும் தேன் மிட்டாய் ரக கவிதைகள்.
நன்றி: குமுதம், 27/7/2015.