சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]
Read more